வங்காளதேசத்தை சேர்ந்தவர்களே நீங்களே இந்தியாவை விட்டு வெளியேறி விடுங்கள் இல்லையேல் விரட்டப்படுவீர்கள் – மகாராஷ்டிராவில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சை போஸ்டர்கள்..!

இந்தியா

வங்காளதேசத்தை சேர்ந்தவர்களே நீங்களே இந்தியாவை விட்டு வெளியேறி விடுங்கள் இல்லையேல் விரட்டப்படுவீர்கள் என அச்சுறுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சியான மராட்டிய நவ நிர்மான் சேனா கடந்த 2006ம் ஆண்டு ராஜ் தாக்கரே என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோத  இந்தியாவில் குடியேறிவர்களுக்கு  எதிராக பிப்ரவரி 9-ந்தேதி பேரணி நடத்தப்போவதாக மராட்டிய நவ நிர்மான் சேனா அறிவித்தது இருந்தது.

இந்நிலையில் நவி மும்பை நகர் அருகே உள்ள பன்வேல் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் ‘வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் நீங்கள் மராட்டிய நவ நிர்மான் சேனா பாணியில் வெளியேற்றப்படுவீர்கள்’ என எழுதப்பட்டிருந்தது.

அந்த போஸ்டரில், மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித்தலைவரான ராஜ் தாக்கரே மற்றும் அவரது மகன் அமித் ஆகியோரின் படமும் இடம் பெற்றிருந்தது.

Leave your comments here...