ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நடைப்பாலம் : முதல்வர் திறந்து வைத்தார்..!

தமிழகம்

ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நடைப்பாலம் : முதல்வர் திறந்து வைத்தார்..!

ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நடைப்பாலம் : முதல்வர் திறந்து வைத்தார்..!

சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக செல்ல நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியின் கீழ் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது 55 புள்ளி 41 மீட்டர் நீளமும், 6 புள்ளி 41 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடை மேம்பாலத்தில் இரண்டு மின் தூக்கிகள், 4 நகரும் படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மின் தூக்கிகள், எல்.இ.டி மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Leave your comments here...