குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நினைவானது – இரணியல் அரண்மனையில் பூமி பூஜை : ரூ3.85 கோடியில் சீரமைப்பு பணி..!

சமூக நலன்

குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நினைவானது – இரணியல் அரண்மனையில் பூமி பூஜை : ரூ3.85 கோடியில் சீரமைப்பு பணி..!

குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நினைவானது – இரணியல் அரண்மனையில் பூமி பூஜை : ரூ3.85 கோடியில் சீரமைப்பு பணி..!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 1300 ஆண்டு பழமையான
அரண்மனை உள்ளது. தற்போது எலும்பு கூடாக காட்சியளிக்கும் இரணியல் அரண்மனை திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் போது பத்மனாபபுரம் அரண்மனைக்கு அடுத்தபடியாக இரண்டாவது தலைநகராகவும், பெரிய அரண்மனையாகவும் விளங்கிய பெருமை உண்டு. 2.43 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அரண்மனை வஞ்சி மார்த்தாண்ட மன்னராலும் வேணாட்ட அரசர்களாலும், திருவிதாங்கூர் மன்னர்களாலும் ஆளப்பட்டதாகும். அரண்மனையின் நடுவில் சிறுமுற்றம், சுற்றுகட்டுகளும், பக்கவாட்டில் மூன்று அறைகளும், சமையலறையும் கொண்டது. மொத்த அரண் தாழ்வாரமும், எண்பட்டை கொண்ட கல்தூண்கள், மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டும், மர வேலைபாடுகள் அதிகம் கொண்ட இந்த அரண்மனை மிகவும் பழமை வாய்ந்த இந்த அரண்மனையில் எந்த சீரமைப்பு பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் பாழடைந்த நிலையில் உள்ளது.

இரணியல் அரண்மனையின் முன்பு உள்ள தோற்றம்


பல கட்டிட அமைப்புகள் இடிந்த நிலையிலும், கூரைகள் விழுந்த நிலையிலும் முழுமையாக அழியக்கூடிய நிலையில் உள்ளது. இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சீரமைக்கக்கோரி அரசுக்கு பல கோரிக்கை விடுத்து இருந்தனர். இது போன்ற பாரம்பரியமும், பெருமையும் மிக்க நினைவு சின்னங்களை வழக்கமாக தொல்லியல் துறை தான் பராமரிக்கும். ஆனால் இதற்கு மாறாக இரணியல் அரண்மனை சுசீந்திரம் தேவஸம் போர்டு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அரண்மனையை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.3.85 கோடியை 2014ல் தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்து வந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு


ஏற்கனவே பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது அந்த அரண்மனை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அரண்மனை, புதர் மண்டி புல் பூண்டுகள் வளர்ந்து யாரும் உள்ளே செல்ல முடியாத  வகையில் இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்ட ராணுவ வீரர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து அவற்றை அகற்றினர்.

குமரி ராணுவ வீரர்கள் அரண்மனை சுத்தம் செய்தபோது


அரண்மனை தர்பார் மண்டபம், வசந்த மண்டபம், மற்றும் வசந்த மண்டபத்தில் உள்ள எட்டரை அடி நீளமும் நான்கரை அடி அகலத்தில் ஒரே கல்லால் ஆன கட்டிலையும் சுத்தம் செய்தனர்.


தமிழக அரசு நமது பாரம்பரியமிக்க கலை பொக்கிஷங்களை பராமரித்து பாதுகாத்து நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அரண்மனை புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் தலைமை வகித்து, விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லின்தாஸ், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து அறநிலையத்துறை தலைவர் சிவகுற்றாலம் பேசியது:- பாரம்பரியமிக்க இரணியல் அரண்மனை ரூ.3.85 கோடியில் புனரமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக குளம், மேற்கூரை உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது. 2ம் கட்டமாக வசந்தமண்டம் மற்றும் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் டெல்லி பிரிநிதி தளவாய்சுந்தரம் முயற்சியால் இப்பணி நடக்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் இப்பணி முடிக்கப்படும். உடனடியாக 2ம் கட்ட பணியும் தொடங்கப்படும். வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை என்பதால் பழமை மாறாமல் செப்பனிடப்படும் என கூறினார்.!


Leave your comments here...