நெற்றியில் வைத்த குங்குமத்தை அகற்றியவர் ஸ்டாலின்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் விமர்சனம்..!

அரசியல்

நெற்றியில் வைத்த குங்குமத்தை அகற்றியவர் ஸ்டாலின்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் விமர்சனம்..!

நெற்றியில் வைத்த குங்குமத்தை அகற்றியவர் ஸ்டாலின்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடும் விமர்சனம்..!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இது சம்மந்தமான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்றது வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் பார்வைக் குறைபாடு உள்ள 280 முதியோர் களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினார் பட்டாபிராம் ஆவடி திருநின்றவூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரம் மருத்துவமுகாம் நடைபெற்றது.


இதில் கண் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் உயர்தரமான மூக்கு கண்ணாடிகள் வழங்கும் விழா திருநின்றவூர் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டு இலவச கண்ணாடிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- மத சின்னங்களை அவமான சின்னங்களாக நினைத்து நெற்றியில் வைத்த குங்குமத்தை அகற்றியவர் ஸ்டாலின் என விமர்சித்தார். கோயில் உள்ளே எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் பாண்டியராஜன் கூறினார்.


Leave your comments here...