6 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவை..!!

இந்தியா

6 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவை..!!

6 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டன.

அங்கு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பியதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட ஜம்முவின் ராம்பன், கிஷ்த்லார், தோடா மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனாலும் காஷ்மீரில் பல மாவட்டங்களில் மொபைல், இணையதள சேவைகள் முடக்கம் தொடர்ந்தது. காஷ்மீரிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சில அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல்களில் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையதள சேவை வழங்க வேண்டும் எனறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே ஜம்முவில் பாதுகாப்பு தொடர்பான மறுஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் முழுவதும் இணையதள சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்துறை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் முழுவதும் 2ஜி மெபைல் இணைய சேவைகள் இன்று முதல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுவதும் 20 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இணைய சேவைகள் மீட்டமைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன்படி காஷ்மீரில் மொபைல் இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கி உள்ளது.

ஆனாலும் 2ஜி இணைய சேவை மிகவும் மெதுவாகவே செயல்படும். அதேவேளையில் சமூக வலைதளங்களுக்கான தடை தொடரும் என்றும் இணையதள சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...