10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-உசிலம்பட்டி இடையே நடந்த சோதனை ரயில் ஓட்டம்..!

சமூக நலன்

10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-உசிலம்பட்டி இடையே நடந்த சோதனை ரயில் ஓட்டம்..!

10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-உசிலம்பட்டி இடையே நடந்த சோதனை ரயில் ஓட்டம்..!

மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி வரை 34 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றன. ரயில் பாதை, பாலங்களின் உறுதிதன்மையை டிராலி மூலம் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட மேலாளர் லெனின், துணை பாதுகாப்பு ஆணையாளர் சீனிவாஸ், முதன்மை நிர்வாக அதிகாரி சின்கா, முதன்மை சிக்னல் தகவல் தொடர்பு அதிகாரி வெங்கடாசலம், முதன்மை மின் பொறியாளர் பிரசாத், முதன்மை பொறியாளர் இளம்பூரணன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ரெயில் பாதையை ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து தண்டவாளத்தின் உறுதி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் விதமாக சோதனை ரெயில் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


 

மதுரை உசிலம்பட்டி இடைய சோதனை ரயில் ஓட்டம்


இதனை தொடர்ந்து நேற்று மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து உசிலம்பட்டிக்கு அதிவிரைவு ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், மதுரை கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட பலர் இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.

இது குறித்து தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறுகையில்:-  மூன்று பெட்டிகளுடன் 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் வழங்கியதும் விரைவில் ரயில் போக்குவரத்து துவங்கும். மார்ச்சுக்குள் உசிலம்பட்டி- போடி இடையிலான பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...