தேனி எம்பி ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்; மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரிக்கை..!

தமிழகம்

தேனி எம்பி ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்; மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரிக்கை..!

தேனி எம்பி ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்; மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரிக்கை..!

தேனியில் நேற்று இரவு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்தது உள்ளார் .

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:- தேனி மாவட்டம் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் மாநில துணை முதலமைச்சர் ஒபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் அவர்கள் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் .

தமிழக அரசாங்கம் எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய மதவெறி அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஆதரித்து ஓட்டு அளித்ததற்காக ஏற்கனவே ஜமாத்தில் இருந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நீக்கப்பட்டு இருக்கிறார் தற்போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.  மேற்கண்ட சம்பவத்திற்கு எங்களின் கண்டனத்தை தெரிவிப்பதோடு தமிழகம் முழுக்க எஸ்டிபிஐ , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மதவெறி அமைப்புகளை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மக்களின் கவனத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால்:-

பாஜகவினர் மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மீது நேற்று  கம்பத்தில் நடந்த தாக்குதல் தற்செயலானது அல்ல. திட்டமிடப்பட்ட  தமிழகத்தில்  இஸ்லாமிய பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் SDPI மற்றும் PFI இயக்கத்தினர் பொது மக்களிடம் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்திய  அரசுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சில துண்டறிக்கைகளை பிரசுரித்து விநியோகம் செய்து வருகின்றனர். பல பொது இடங்களில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் காவல் துறை இந்த இயக்கத்தினரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

இதேபோல் பொம்மிநாயக்கன் பட்டியில் கடந்த  2018ம் ஆண்டு மே மாதத்தில் தலித் பெண்மணி ஒருவரின் இறுதி ஊர்வலத்தை தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்ததை அடுத்த நடந்த கலவரத்தில் தீண்டாமையின் கொடூர உருவத்தை பார்க்க முடிந்தது. நான் 11/05/2018 அன்று பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களுடன் உடனே அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்தோம். அங்குள்ள தலித் மக்கள் அந்த ஊரில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறார்கள் என்றும், பேருந்துகளில் கூட தங்களை செல்ல விடாமல் தடுக்கிறார்கள் போன்ற பல்வேறு புகார்களை நம்மிடத்தில் கூறியதை அன்றே பதிந்திருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதிமுக கண்டுகொள்ளவில்லை. விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, தலித் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டார்கள் என்று நேரிடையாக குற்றம் சாட்டியிருந்தேன்.

அந்த மாவட்டத்தில் ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்ட நிலையில், தற்போது  கடும் தாக்குதல் நடைபெற்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்க கூடிய பகுதிகளில் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டும், அச்சத்தின் காரணமாகவும் அரசியல் கட்சிகளும்,அரசும் மெத்தன போக்கை கடைபிடிப்பது மிக பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும். பொது அமைதி, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதோடு மத நல்லிணக்கத்திற்கு  கேடு விளைவிக்கும். மாநில அரசும், காவல்துறையும் இனியும் அமைதி காக்காமல் வேகத்தோடு கூடிய விவேகத்தோடு, மத அடிப்படைவாத சக்திகள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழகத்திற்கு நலன் தரும். அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக மக்களின் பார்வைக்கு கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

Leave your comments here...