644 பயங்கரவாதிகள்; 177 பயங்கர ஆயுதங்களுடன் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண்..!

இந்தியா

644 பயங்கரவாதிகள்; 177 பயங்கர ஆயுதங்களுடன் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண்..!

644 பயங்கரவாதிகள்; 177 பயங்கர ஆயுதங்களுடன் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண்..!

அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), ரப்ஹ தேசிய விடுதலை முன்னணி (ஆர்.என்.எல்.எம்.), கம்தாபூர் விடுதலை அமைப்பு (கே.எல்.ஓ.) பெங்காலி தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.பி.) உள்ளிட்ட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களை அரசு தடை செய்துள்ளது.

இந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் அடிக்கடி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கைது செய்ய போலீசார் மற்றும் சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களை சரண் அடைய செய்ய அரசு சார்பில் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.இதில் சமீபத்தில் என்.டி. எப்.பி. இயக்கம் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக அரசுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 8 இயக்கங்களை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் இன்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண் அடைந்தனர்.இதற்காக நடந்த நிகழ்ச்சியில் 177 பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களில் முக்கிய தலைவர்களும் அடங்குவர்.

மேலும் ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அசாமில் அண்மையில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் சரணடைந்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

Leave your comments here...