நடைமுறைக்கு வருகிறது குப்பை கொட்டினால் 500 !எச்சில் துப்பினால் 100 அபராதம்; சென்னை மாநகராட்சி அதிரடி..!

தமிழகம்

நடைமுறைக்கு வருகிறது குப்பை கொட்டினால் 500 !எச்சில் துப்பினால் 100 அபராதம்; சென்னை மாநகராட்சி அதிரடி..!

நடைமுறைக்கு வருகிறது குப்பை கொட்டினால் 500 !எச்சில் துப்பினால் 100 அபராதம்;  சென்னை மாநகராட்சி அதிரடி..!

சென்னையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. சென்னை மாநகராட்சி, இந்தக் குப்பைகளை அள்ளி பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் கொட்டுகிறது. அதில் பல்வேறு பிரச்னைகள் உருவான நிலையில், குப்பையைக் கட்டுப்படுத்தவும், அவற்றை தரம் பிரித்து மறு சுழற்சி செய்யவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதையொட்டி, 2016-ம் ஆண்டு திடக் கழிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும், விதிமுறைகளை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது.

மேலும் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 500 ரூபாயும், தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், குப்பையை எரிப்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடத்தில் எச்சில் துப்பும் நபர்களிடம் இருந்து 100 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த விதி நடைமுறைக்கு வரும் என  தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்:-

சென்னையை குப்பையில்லா தூய்மை நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவை கட்டணம், தரம் பிரிக்கப்படாத, பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை என சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடுமையாக்கி தமிழக அரசின் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.  வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து தமிழக அரசின் நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பையில்லா தூய்மை நகரங்கள் உருவாக்கும் திடக்கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறியுள்ளார்.!

Leave your comments here...