என்னாது பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படுமா..? ஹெச்.ராஜா வைக்கும் டிவிஸ்ட்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜகவினா் பிரசாரம் மேற்கொண்டனா். இதில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, தேவா்சிலை உள்ளிட்ட பல பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.
இதேபோல் காரைக்குடியில் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு குடியுரிமை சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேறக்கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா:- பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்றும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாகரிகமானவர்கள் என்று கூறினார். திராவிடர் கழகத்தினருக்கு இந்து எழுச்சியைப் பார்த்து பயம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்து கடவுளை இழிவுபடுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது நாகரிகம் பண்பாடு பற்றி வீரமணி ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு என்றும் கூறினார். மேலும் திராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க. முறிக்கவில்லை என்றால் விரைவில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் கூறியுள்ளார்.!
Leave your comments here...