தனியார் பால் நிறுவனங்கள் பால் விலை உயர்வை திரும்ப பெறம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்..!

சமூக நலன்

தனியார் பால் நிறுவனங்கள் பால் விலை உயர்வை திரும்ப பெறம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்..!

தனியார் பால் நிறுவனங்கள் பால் விலை உயர்வை திரும்ப பெறம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்..!

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன்படி ஹெரிடேஜ், திருமலா, டோட்லா, ஜெர்சி, சங்கம், சீனிவாசா, கோவர்த்தனா, ஜேப்பியார் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது. அதன் பிறகும் சில தனியார் நிறுவனங்கள் பால் விலையினை உயர்த்தியது.

இந்நிலையில் தனியார் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக்  நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தனியார் பால் நிறுவனங்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட உள்ள அறிக்கையில்:- ஆந்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களும், தமிழகத்தைச் சோ்ந்த தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு என்று பொய்க் காரணம் கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயா்த்தி இருந்தது.தனியார் பால் நிறுவனங்களின் பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதால், தமிழக மக்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 2019ம் ஆண்டில் இதுவரை 3 முறை பால் விலை உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களின் அதிகார போக்கை காட்டுகிறது.

தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயா்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். வருங்காலங்களில் அரசு அனுமதியின்றி பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தக்கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அரசு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.ஏற்கெனவே, பொருளாதார சரிவால் பெரிய தொழில்கள் நஷ்டமடைந்துள்ள நிலையில், அன்றாடம் இல்லங்களில் உபயோகிக்கக்கூடிய பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்களை கடக்க சற்று சவால் நிறைந்ததாகவே இருக்கிறது என்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஆகவே தனியார் பால் விலையை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், ஆவின் பால் கொள்முதலை தமிழக அரசு அதிகரிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...