ஜல்லிகட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் தலைவர் காயல் அப்பாஸ் அரசுக்கு வேண்டுகோள்

தமிழகம்

ஜல்லிகட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் தலைவர் காயல் அப்பாஸ் அரசுக்கு வேண்டுகோள்

ஜல்லிகட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் தலைவர் காயல் அப்பாஸ் அரசுக்கு வேண்டுகோள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நடைப்பெற்றது.

இந்நிலையில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- தமிழகத்தில் ஆண்டு தோறும் தை திரு நாளில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிகட்டு காளைகளை விரர்கள் அடக்கி தமிழர்களின் பாரபரியத்தையும் பெருமையையும் சேர்த்துள்ள வீரர்கள் அணைவருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

மதுரை மாவட்டம். சோழவந்தான் சங்ககோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், செக்கானுரணி ஊத்துபட்டியை சேர்ந்த செல்ல பாண்டி. புதுக்கோட்டைமாவட்டம் .ராஜகிரி அருகே உள்ள கக்காம்பட்டியை சேர்ந்த பழனியான்டி. சேலம் மாவட்டம். எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த உத்தரகுமார் . ஆகிய நான்கு பேர் ஜல்லிகட்டில் காளைகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது . இனி வரும் காலங்களில் ஜல்லிகட்டில் காளைகளை அடக்க களம் இறங்கும் வீரர்கள் மிக கவணமாக கையால வேண்டும் . ஜல்லிகட்டை வேடிக்கை பார்க்கும் பொது மக்கள் கவணத்துடன் பாதுகாப்பாகவும் பார்க்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

ஜல்லிகட்டில் உயிரிழந்துள்ள ஸ்ரீதர், செல்லபாண்டி , பழனியாண்டி , உத்தரகுமார் , ஆகிய நான்கு பேரின் குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

எனவே ஜல்லிகட்டில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை தலா பத்து லட்சம் ரூபாய் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.!

Leave your comments here...