ராஜஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ‘டாக்டர் வெடிகுண்டு’ பரோலில் வந்தபோது மாயமானார்…!

இந்தியா

ராஜஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ‘டாக்டர் வெடிகுண்டு’ பரோலில் வந்தபோது மாயமானார்…!

ராஜஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ‘டாக்டர் வெடிகுண்டு’ பரோலில் வந்தபோது மாயமானார்…!

இந்தியாவில் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக கூறப்படும் மற்றும் 1993 ராஜஸ்தான் வெடிகுண்டு சம்பவத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி; இவர் ’Dr. Bomb’ என்று பலராலும் அறியப்படுகிறார்.

1993 ராஜஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ‘டாக்டர் வெடிகுண்டு’ என்று புகழ் பெற்ற டாக்டர் ஜலீஸ் அன்சாரி (69). சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாள் பரோல் வழங்கி இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு பரோல் முடிவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்புப் படை (ஏ.டி.எஸ்), குற்றப்பிரிவு மற்றும் மும்பை போலீசார் அவரைத் தேடி மும்பை சென்ட்ரலில் உள்ள மோமின்புரா வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், திரும்பி வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.அன்சாரியின் குடும்பத்தினர் அவர் வியாழக்கிழமை அதிகாலை தொழுகைக்காக சென்றார். ஆனால் அவர் திரும்பி வர வில்லை. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

டாக்டர் அன்சாரி 1994-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார், அவர் ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்ததில் பங்கு வகித்ததாக மத்திய புலனாய்வுப் பிரிவினால் (சிபிஐ) முதன் முதலில் கைது செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் அவர் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் ஆறு இடங்களில் 1993 டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ரெயில்களில் குண்டுவெடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

Leave your comments here...