முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் தவெக-வில் பொறுப்பு- யார் இந்த அருண்ராஜ்..?

தவெகவில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.,வில் இணைந்த பிறகு, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வெற்றியை தாண்டி ஒரு, அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் (விஜய்) எடுத்திருக்கும் உன்னத பணியில், என்னையும் இணைத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இத்தனை வருடம் பார்த்து விட்டோம். ஒரு மாற்றம் தேவை. அதற்கு தான் சாதாரண மனிதனாக இந்த முடிவை எடுத்து உள்ளேன். உண்மையான கொள்கை பிடிப்பை த.வெ.க., வில் தான் பார்க்கிறேன். உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. மக்களுக்கு மேலும் சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த அருண்ராஜ்? வெளியான பரபரப்பு பின்னணி.!
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் தீடிரென அந்த வழக்கு நீர்த்து போனது அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது.
அப்போதே இருவரும் தங்களது எதிர்கால அரசியல் ஆசையை பரிமாறிக் கொண்டனர் தனது செல்வாக்கு, பாஜக தொடர்புகளை பயன்படுத்தி தவெகவிற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இவர் உதவியதால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தவெகாவில் இணைந்துள்ளார்
Leave your comments here...