பணத்திற்காக என்னை பயன்படுத்திய ஆர்த்தி… என் குழந்தைகளை சந்திக்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கிறார்கள்… நடிகர் ரவி மோகன் வேதனை..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த சூழலில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் ஜோடியாக கைகோர்த்து திருமண நிகழ்வில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முன்னணி நடிகைகளும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மனைவியை பிரிய காரணம் என்ன? என்பது குறித்து நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,:- இத்தனை வருடங்களாக என்னை முதுகில் குத்தினார்கள். இப்போது என்னை நெஞ்சில் குத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது. பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தினார். என்னை கணவராக கூட மதிக்கவில்லை. எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு என்னை ஜமீன் தாரராக கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர்.
எனது சொத்துகள், எனது வங்கி கணக்குகள், எனது சமூக ஊடக கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. லைவ் ஸ்டைல் என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்தான் என் கடன் பிரச்சினைக்கு காரணம்.
கடந்த 5 வருடங்களாக எனது பெற்றோருக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவிடாமல் தடுத்து வந்தார்கள். முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சி, ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயன்றேன். ஆர்த்தியால் உடல், மனம், மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல, எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர்.
பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச்செல்ல எடுத்த வலிகள் அவர்கள் அறிந்து கொள்வார்கள். என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தவர். என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Leave your comments here...