பஹல்காம் தாக்குதல் எதிரொலி – கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை..!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறுக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...