திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்.. கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக தமிழக அரசு மாற்றி உள்ளது – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக தமிழக அரசு மாற்றி உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். தொண்டர்களை போலீசார் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: தமிழ் மிக தொன்மையான மொழி என பிரதமர் மோடி உலக அரங்கில் சொல்லி கொண்டு இருக்கிறார். ஐ.நா சபையில் தமிழ் மொழியை பிரதமர் போற்றினார். தமிழ் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ் மொழிக்கு பா.ஜ., அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரசும், தி.மு.க.,வும் நடத்த விடாமல் தடுத்தனர்.
பிரதமர் மோடி தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் கொண்டு வந்தார். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி கொடுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர்.
கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக தமிழக அரசு மாற்றி உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை உடனடியாக முன்வர வேண்டும். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம். வைணவ, சைவ தலத்தில் பலியிடும் வழக்கம் கிடையாது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Leave your comments here...