திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு.!

தமிழகம்

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு.!

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு.!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் காவல் பணியில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வில்சன் (58) என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பணியில் இருந்தார். இந்நிலையில் ஜனவரி 8ஆம் தேதி இரவு 9:45 மணியளவில் திடீரென அந்த பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு பேர் கைத்துப்பாக்கியால் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு உள்ளனர். இதில் சம்பவ இடத்தில் வில்சன் இறந்து விட்டார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்:-

தமிழகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடம் காட்டுப்பகுதி அல்ல. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. செக்போஸ்டில் பணியில் இருந்த அதிகாரியை சர்வ சாதாரணமாக கத்தியால் குத்தியும், சுட்டும் கொன்று விட்டு செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்.

அவர்கள் கொன்றது ஒரு வில்சனை அல்ல. ஒட்டுமொத்த காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வளவு நிதானமாக செயல்பட முடியும். தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது. பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக தமிழகம் மாறி கொண்டிருக்கிறது என்பதை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட ஒரு கட்சி கூட இந்த சம்பவத்தை கண்டிக்காதது கண்டனத்துக்குரியது. அவர்கள் கண்டிக்க முடியாது. ஏனெனில் அவர்களது கூட்டணியே பயங்கரவாதத்தோடுதான். அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். கொலையாளியும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பயங்கரவாதி. கொல்லப்பட்டவரும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். கண்டனம் தெரிவிக்கக்கூட மனம் வரவில்லை என்றால் இவர்கள் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக போலியாக நடித்து பயங்கரவாதிகளைத்தான் பாதுகாக்கிறார்கள் என்பது தான் உண்மை.

காவல்துறைக்கே துணையாக இருக்காத இந்த கட்சிகள் சிறுபான்மை மக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கும்.? இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்துதமிழகத்தை மீட்க வேண்டும் என கூறினார்.!

Leave your comments here...