இங்கும் முறைகேடு..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு புகார் குறித்து விசாரணை..!

சமூக நலன்

இங்கும் முறைகேடு..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு புகார் குறித்து விசாரணை..!

இங்கும் முறைகேடு..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு புகார் குறித்து விசாரணை..!

கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் தரவரிசையில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18ம் ஆண்டுக்கான குரூப் 2ஏ தேர்விலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து தேர்வு எழுதியவர்கள் 30க்கும் மேற்பட்டோர் முதல் 50 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு, 2017-18ம் ஆண்டின் குரூப் 2 தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாவட்ட தேர்வர்கள் எத்தனை பேர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்என்றும்  குற்றச்சாட்டு எழுந்துள்ள மையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு.?

ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் குரூப் 2ஏ தேர்வு எழுதியவர்கள் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் முதல் 50 இடங்களை பெற்றுள்ளனர். 2017-2018 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெற்றதா என சந்தேகம்

ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்திருந்தனர்

ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி? என விசாரணை செய்யப்பட உள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வுக்கான பணிகளில் பெரும்பாலானவை ஏர்கனவே நிரப்பப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...