கும்பகோணத்தில் இந்துகள் குடியிருக்கும் பகுதியில் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிருத்துவ மிஷனரி குழுக்கள் : இந்து மக்கள் கட்சி போலீசாரிடம் புகார்..!

தமிழகம்

கும்பகோணம் காமராஜர் நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்து குடும்பங்கள் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு சமூகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வந்து வீடு, வீடாக சென்று மதம் மாறும்படி அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம், பைபிள் புத்தகம், கையேடுகளை வழங்கி வந்தனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த சிலர் இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில செயலாளர் குருமூர்த்தியிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரு அமைப்பை சேர்ந்த 15 பேர் காமராஜர் நகர் வந்து மதம் மாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்ததும் இந்து மக்கள் கட்சியினர் விரைந்து சென்று கிறிஸ்தவ அமைப்பினரை கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பின்னர் இந்து மக்கள் கட்சியினர் இது தொடர்பாக தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து போலீசார் விசாரித்ததில், மதம் மாற்ற பிரச்சாரத்தில் பல நாட்களாக ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதைத்தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Leave your comments here...