உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார்..!

இந்தியா

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார்..!

உடுப்பி பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷ தீர்த்தர் காலமானார்..!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என உடுப்பி பெஜாவர் மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஜாவர் மடத்தின் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் காலமானதை அறிந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சுவாமிஜியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கும் எனவும், பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய தலைவர்கள், இந்து மத தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...