முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு 2020 முதல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- உத்தரபிரதேச அரசு

இந்தியா

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களை செப்டம்பர் மாதம் சந்தித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விரைவில் அவர்களின் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மறுவாழ்வு பெறும் வரை 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, மாநில அரசின் இலவச சட்ட உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவரால் கைவிடப்பட்ட பிற மத பெண்களுக்கும் இந்த உதவித் தொகை அளிக்கப்படும் எனவும், நிதிஉதவியை பெற நீதிமன்ற வழக்கு ஆவண நகல்,முதல் தகவல் அறிக்கை நகலை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...