விருதுநகர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.
இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும். தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்.காலேஷ் சதாசிவம், எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடிதுள்ளனர்.
“என்டோமான்”என்னும் அறிவியல் ஆய்வு இதழில் இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337-ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும்.
முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் ஆனந்த், கள இயக்குநர், பத்மாவதே ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...