ரூ.500 கொடுத்தும் கூட்டம் இல்லை: சமுக வலைதளங்களில் பரவும் செய்தி: புலம்பிய திமுக தலைவர் ஸ்டாலின்..!

தமிழகம்

ரூ.500 கொடுத்தும் கூட்டம் இல்லை: சமுக வலைதளங்களில் பரவும் செய்தி: புலம்பிய திமுக தலைவர் ஸ்டாலின்..!

ரூ.500 கொடுத்தும் கூட்டம் இல்லை: சமுக வலைதளங்களில் பரவும் செய்தி: புலம்பிய  திமுக தலைவர் ஸ்டாலின்..!

குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில்  பேரணி நடைப்பெற்றது.

தி.மு.க கூட்டணி கட்சிகளின் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து, காலை, 10:00 மணிக்கு, பேரணி துவங்கியது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி, லேங்ஸ் கார்டன் சாலை, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. தி.மு.க.வின் இந்தப் பேரணியை போலீசார் டிரான் கேமராக்கள் மற்றும் கேமராக்கள் மூலம் பதிவு செய்திருந்தனர். மத்திய – மாநில அரசு களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கண்டன கோஷமிட்டபடி, தலைவர்களும், தொண்டர்களும், 3 கி.மீ., நடந்து சென்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கு முன், சிதம்பரம், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, கடுமையாகவும், ஆவேசமாகவும் பேச விரும்பினர். ஆனால், அவர்களை பேச அனுமதித்தால், கண்டன கூட்டம் முடிய நேரமாகி விடும் என, தி.மு.க., கருதியது. அதனால், ஸ்டாலினை தவிர, மற்ற தலைவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும், ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தப் பேரணிக்கு தலைமை தாங்கிய ஸ்டாலின், ஒட்டு மொத்த மக்களையும் ஒன்று திரட்டி, தங்களது பலத்தை மத்திய அரசுக்கு காட்டுவோம் என திட்டமிட்டிருந்தார். ஆனால், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று சொல்லும் மாதிரி, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக, இந்த சட்டத்தினால் பாதிக்கப்படுபவர்களாக கருதப்படும் இஸ்லாமியர்களே இந்தப் போராட்டத்தில் சொல்லும் அளவிற்கு கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வின் இந்தப் போராட்டத்தை நடிகர், நடிகைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் புறக்கணித்தனர்.

இதனிடையே, பேரணியில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தலைக்கு ரூ. 500 கொடுத்து ஆட்களை அழைத்து வந்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் சிலரிடம் செய்தியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘எந்த காரணத்திற்காக இங்கு வந்திருக்கோம் என எங்களுக்கே தெரியாது. ஆனால், ரூ. 500 தருவதாக சொன்னார்கள், அதற்காகத்தான் வந்தோம்,’ என அப்பட்டமாக கூறிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியளித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வரும் நிலையில், தி.மு.க.வினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி திட்டம் கைகொடுக்கவில்லை என ஸ்டாலின் புலம்பி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். மேலும், ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகக் கூறி பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் திமுகவினரை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். ஒரு பெண் நிரூபரை திமுக.வினர் கையை பிடித்து இழுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை, அண்ணா சாலையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை நோக்கி செல்லும் சாலைகளில், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். எதிர்பார்த்த கூட்டமும் இல்லாததால் திமுக தலைவர் ஸ்டாலின் பெரும் அதிர்ச்சியாக இருந்ததாம்.

Leave your comments here...