உபியில் கலவரத்தை தூண்டி விட்டதாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 3 பேர் கைது..!

இந்தியா

உபியில் கலவரத்தை தூண்டி விட்டதாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 3 பேர் கைது..!

உபியில் கலவரத்தை தூண்டி விட்டதாக  பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 3 பேர் கைது..!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 19 பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ‘பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் மாநில தலைவர் வாசிம், பொருளாளர் அஷ்பக், உறுப்பினர் நதீம் ஆகியோரை உத்தரபிரதேச போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் 3 பேரிடம் இருந்தும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், கொடிகள், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடந்த 19-ந் தேதி நடந்த போராட்டத்துக்கு வியூகம் வகுத்து, அதை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி, வன்முறையை தூண்டி விட்டதாக நதீம், அஷ்பக் ஆகியோர் விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி தெரிவித்தார்.

Leave your comments here...