ஜார்கண்ட் தேர்தல்: பாஜக தோல்விக்கு முதல்வர் ரகுபர் தாஸ் காரணம்: ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ்…?

இந்தியா

ஜார்கண்ட் தேர்தல்: பாஜக தோல்விக்கு முதல்வர் ரகுபர் தாஸ் காரணம்: ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ்…?

ஜார்கண்ட் தேர்தல்: பாஜக தோல்விக்கு முதல்வர் ரகுபர் தாஸ் காரணம்:  ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ்…?

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வரும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான எண்களைத் தாண்டி காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி முன்னிலையில் உள்ளது.81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பாஜகவும், கடந்த தேர்தலில் அதன் கூட்டணி கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் தனித்தனியாக களமிறங்கின. பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் ரகுபர் தாஸையே முன்னிறுத்தி 81 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

எதிர்க்கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருக்கிறார். அம்மாநில முன்னாள் முதல்வர் சிபுசோரனின் மகன் ஹேமத் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.

5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. காலை 8.40 நிலவரப்படி பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

இதனை அடுத்து, பல தொகுதிகளில் இழுபறி நீடித்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களைத்தாண்டி காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில் பாஜக தோல்விக்கு ரகுபர்தாஸ் தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன. மாநிலத்தில் கடந்த 19 ஆண்டுகளில் அதிகமுறை பாஜகதான் ஆட்சியில் இருந்துள்ளது. பாஜகவின் பழங்குடியின தலைவரான அர்ஜுன் முண்டாவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவரை ரகுபர் தாஸ் ஓரம் கட்டியதாக புகார்கள் கூறப்பட்டன. இதேபோன்று கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் AJSU-ன் சுதேஷ் மாதோவையும், ரகுபர்தாஸ் மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave your comments here...