குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ரயிலை கொளுத்திய போராட்டக்காரர்கள்: ரூ.88 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம்..!

இந்தியா

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பல மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. போலீசார் மீது தாக்குதல், பொதுச்சொத்துக்களுக்கு தேசம் ஏற்படுத்துதல் என போராட்டம் திசை மாறி வருகிறது. இது வரை 12க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், போலீசார் பலர் காயமுற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நேற்று மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையில் ரூ.88 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துகள் சேதமானது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கிழக்கு ரயில்வேயில் ரூ.72 கோடியும், தென்கிழக்கு ரயில்வேயில் ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave your comments here...