குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 15 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 15 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்..!

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 15 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையாக உருவெடுத்து உள்ளது.

இதேபோல் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமை தாங்கினார்.

இதில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள்’ குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல”  என கூறியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் , உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைப்போல் தூத்துக்குடியில் இன்று மாலை 5.00 மணியளவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் விவிடி சிக்னல் அருகே உள்ள மையவாடி எதிராக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..!

Leave your comments here...