அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வன்முறை தூண்டும் விதமாக பேசிய கபீல் கான் மீது வழக்கு…!!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யார் இந்த கஃபீல் கான்.?
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் அங்கு பணிபுரிந்த மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், 9 மாத சிறைத்தண்டனைக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்தில் மருத்துவர் கஃபீல் கான் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை செய்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவர் கபீல் கான் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கஃபீல் கான் அலிகார் முஸ்லிம் பல்கலையில் குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்து பல்கலைக்கழக உரையில்:- இங்கு அனைவரும் இந்து மற்றும் முஸ்லீம்களாக இருக்கவே ஊக்குவிக்கப்படுகிறார்கள். மனிதத்தன்மையுடன் இருக்க யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் பதவிக்கு வந்ததில் இருந்தே அரசியலமைப்பு மீதான நம்பிக்கை போய்விட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களை இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. என்.ஆர்.சியை அமல்படுத்துவதன் மூலமாக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தாடி வைத்திருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று ஆர்.எஸ்.எஸ் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியா முஸ்லீம்களுக்கான நாடு அல்ல என்பதை தற்போதைய அரசு பல்வேறு சட்டங்களின் மூலமாக நிரூபித்து வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்’ என்று பேசியதாக எப்.ஐ.ஆர்-இல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், அலிகார் பல்கலைக்கழகத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு வகையில், இந்துத்துவ எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave your comments here...