இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வதுபோல நாடகமாடிய ஒரே கட்சி திமுகதான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

அரசியல்தமிழகம்

இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வதுபோல நாடகமாடிய ஒரே கட்சி திமுகதான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வதுபோல நாடகமாடிய ஒரே கட்சி திமுகதான் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ததுபோல நாடகமாடும் கட்சி திமுக தான் சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எஎடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்:- குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் தெளிவுபடுத்தி உள்ளனர். குடியுரிமை சட்டம் இந்தியர்களை பாதிக்காது.

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரச்னை இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை தமிழகத்தில் ஸ்டாலின் கூறி வருகிறார்.

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களை பொருத்தவரை அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்து விட்டதாக கூறுவது தவறு. கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர். மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை என முதலமைைச்சர் பழனிசாமி என கூறியுள்ளார்

Leave your comments here...