வளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..!

ஆன்மிகம்

வளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..!

வளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..!

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடிப்பார். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.

இன்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, வளசரவாக்கம் அருள்மிகு வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர் கோவிலில் 1,0008 சங்குகளில் மந்திர உரு செய்யப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளை பெற்றனர். இதேபோல் அனைத்து சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave your comments here...