30வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய யாசகர்.!

Scroll Down To Discover

துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல்பாண்டியன். இவர் கொரோனா காலகட்டத்தில் பிச்சை எடுத்த பணத்தில் உணவு செலவு போக மீதமுள்ளதை ரூ.10 ஆயிரம் வீதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரண நிதியாக 28 முறை வழங்கினார்.

சில நாட்களுக்கு முன் சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக வழங்க ரூ.10ஆயிரம் நிதி வழங்கினார்.

இந்நிலையில், நேற்று மேலும் ரூ.10 ஆயிரம் நிதியை 30வது முறையாக மதுரையில் கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினார். இதுவரை அவர் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார். இவருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது