குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில டிஜிபிக்களுக்கு என்சிபிசிஆர் சுற்றறிக்கை..!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியா வந்துள்ள இந்துக்கள், புத்தர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள் உள்பட ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வியாழக்கிழமை மத்திய அரசு அனுப்பி வைத்தது.இந்த மசோதாவுக்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துளளது.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநில டிஜிபிக்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சிறார்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...