உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலாய சீதாராமன் முதல் முறையாக பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 34 வது இடத்தில் உள்ள நிர்மலா, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். இதே போன்று எச்சிஎல் கார்ப்பரேஷன் சிஇஓ நடார் மல்கோத்ரா (54), இந்தியாவின் பணக்கார பெண்மணியாக கருதப்படும் மசூம்தர் ஷா (65) ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தில் உள்ளார்.
Leave your comments here...