அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..!

சமூக நலன்

அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..!

அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு கொலை..!

அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் அசாம் பதிப்பில் பணியாற்றிவந்தவர் மூத்த பத்திரிகையாளர் நரேஷ் மித்ரா,47, கடந்த நவம்பர் மாதம் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

அவரை பொதுமக்கள் சிலர் மீட்டு கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் யாரோ இரும்புக்கம்பியால் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் கோமா நிலையில் இருந்துள்ளார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழிலில் பயணியாற்றி வந்த நரேஷ் மித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் நரேஷ் மித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நரேஷ் மித்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...