துணை ராணுவ படையினர் சீருடைகளில் விரைவில் காதி பயன்பாடு – காதி வாரியத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா..!

சமூக நலன்

துணை ராணுவ படையினர் சீருடைகளில் விரைவில் காதி பயன்பாடு – காதி வாரியத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா..!

துணை ராணுவ படையினர் சீருடைகளில் விரைவில் காதி பயன்பாடு – காதி வாரியத்தின்  தலைவர் வினய் குமார் சக்சேனா..!

இந்திய துணை ராணுவப் படையினர் தங்களின் சீருடைகளில் காதி துணியையும், அவர்களின் உணவகங்களில் ஊரகத் தொழில்களில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், அப்பளம், தேன், சோப்பு, சலவைத் தூள், ஷாம்பூ, பெனாயில், தேயிலைத் தூள், கடுகு எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்தப் படைப்பிரிவின் தலைமை இயக்குநர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அண்மையில் பிறப்பித்த உத்தரவு காதி மற்றும் கிராம தொழில்கள் மூலமான பொருட்களுக்கு மாபெரும் ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அதிகாரிகளுக்கும், துணை ராணுவப் படை அதிகாரிகளுக்கும் இடையே பல முறை நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற சந்திப்புகளின் போது, காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் ஒப்புதலுக்காக மாதிரிகள் பலவற்றை பகிர்ந்து கொண்ட பின், இறுதிநிலை எட்டப்பட்டது.

VINAI KUMAR SAXENA
Chairman, KVIC (Khadi & Village Industries Commission)

“இந்த முடிவை அடுத்து, காதி மற்றும் கிராம தொழில் துறையில் தற்போதுள்ள ரூ.75,000 கோடி என்ற வருவாய் இரட்டிப்பாவது மட்டுமின்றி, துணை ராணுவப் படையினருக்குப் பல லட்சம் மீட்டர் காதித் துணி நெசவு செய்ய இருப்பதால், காதி கைவினைப் பொருட்கள் தயாரிப்போரின் எண்ணிக்கையும் பல லட்சமாக உயரும்” என்று வாரியத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.

Leave your comments here...