கற்பழிப்பு குற்றங்களை செய்யும் மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு- ஹெச்.ராஜா.!

சமூக நலன்

கற்பழிப்பு குற்றங்களை செய்யும் மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு- ஹெச்.ராஜா.!

கற்பழிப்பு குற்றங்களை செய்யும் மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு- ஹெச்.ராஜா.!

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டருக்குப் பொதுமக்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் தெலங்கானா மக்கள் அப்பகுதி போலீஸாருக்கு என்கவுன்டர் செய்ததற்காகப் பாராட்டுகள் தெரிவித்ததுடன் பூக்களைத் தூவி அவர்களை வரவேற்றுவருகின்றனர்.

அதேநேரம் சமூக ஆர்வலர்கள் உட்பட ஒரு சிலர் என்கவுன்டருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதைபோல் உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் 10 ‌நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

வழக்கு விசாரணைக்காக அந்த பெண் தனது கிராமத்திலிருந்து, ரே‌பரேலி‌யில் உள்ள நீதிமன்றத்து‌க்கு பு‌றப்பட்டார் வழியில் அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய 5 பேர், மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு தீவைத்து கொளுத்தினர். இதில் படுகாயமடைந்த அந்த பெண், லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் , பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதென தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு தீ வைத்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இரண்டு பேர், 10 நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள்.

டெல்லி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். உன்னாவ் பெண்ணின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய முன்னணி செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார் அதில்:-

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. உனாவ் படுகொலை கற்பழிப்பு குற்றவாளிகள் பைலில் வெளிவந்த 5 நாட்களுக்குள் தாங்கள் கற்பழித்த பெண்ணைப் படுகொலை செய்கின்றனர். இந்த மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். என கூறியுள்ளார்.

Leave your comments here...