சபரிமலைக்கு மாலை போட்ட மாணவனை கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்..!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். இவரது மகன் பிரமோத் பாலா (12), இடையர்காடு கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் டிஎன்டிஏ குட் ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை இட்டு உள்ள பிரமோத் பாலாவை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி வகுப்பாசிரியர் கூறியுள்ளார். கழிவறையை சுத்தம் செய்யும்போது, பிரமோத் பாலாவின் இடது கையில் ஆசிட் கொட்டியத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவனை அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யுமாறு கூறிய ஆசிரியர், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை.
Leave your comments here...