சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, மற்றும் தங்கம் பறிமுதல்..!!

சமூக நலன்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, மற்றும் தங்கம் பறிமுதல்..!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, மற்றும் தங்கம் பறிமுதல்..!!

சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அன்று துபாயில் இருந்து EK-546 விமானத்தில் வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 28) மற்றும் தமீமுன் அன்சாரி (வயது 33) கோலாலம்பூரிலிருந்து ஏகே-13 விமானத்தில் வந்திறங்கிய சிவகங்கையைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது 22) ஆகியோரை தடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 157 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் மற்றும் மலக்குடலில், பழுப்பு நிற ரப்பர் இழையால் 5 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 974 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.44 லட்சம் மதிப்புள்ள 1.131 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மற்றொரு சம்பவத்தில் வியாழக்கிழமை அன்று இன்டிகோ 6E-66 விமானத்தில் துபாய் செல்லவிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் முகமது (வயது 22) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அவருடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4,300 சவுதி ரியால்கள் ஆகியவற்றையும் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3500 அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டுக் கரன்சிகளின் மொத்த மதிப்பு ரூ.6.83 லட்சமாகும்.

முன்னதாக புதன்கிழமை அன்று பட்டிக் விமானம் ID-6019 விமானத்தில் கோலாலம்பூர் செல்லவிருந்த சிவகங்கையைச் சேர்ந்த சபீர் அகமது (வயது 21) என்பவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4.75 லட்சம் மதிப்பிலான 3500 யூரோக்கள் மற்றும் 2200 ஜிபிபி கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...