அரசியல்
இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்..!

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இஇந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்:- உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டே பிரெஞ்ச், ஹிந்தி மொழி பயிற்சி தொடங்கப்பட்டது. ஹிந்தி மட்டுமல்ல இந்திய மொழிகளான மராத்தி, பெங்காலி, குஜராத்தி மற்றும் பிரெஞ்ச் மொழிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல , விருப்ப பாடம் தான். இந்தியை திணிக்க வில்லை, தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு. இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி, ஒரு உலக மொழி ஆகியவற்றில் பயிற்சி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். மாணவர்களே விருப்ப பாடத்தை எழுதி கொடுத்து தேர்வு செய்கிறார்கள் என கூறினார்.
Leave your comments here...