சர்ச்சை போஸ்டர் : லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்..!

இந்தியா

சர்ச்சை போஸ்டர் : லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்..!

சர்ச்சை போஸ்டர் : லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ்..!

“காளி” என்ற ஆவணப் படத்தை இயக்குநர் லீனா மணிமேகலை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் புகை பிடிப்பது போலவும் கையில் தன்பால் ஈர்ப்பார்களின் கொடியை வைத்திருப்பது போலவும் படம் இடம் பெற்று இருந்தது.

இந்த போஸ்டர்கள் இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இந்த ஆவணப் பட போஸ்டர் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்து கடவுள்களை திட்டமிட்டு அவதூறு செய்வதாக லீனா மணிமேகலை மீது புகார் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், ட்விட்டர் தளத்தில் இருந்தும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடவுள் காளியை அவதூறாக சித்தரித்ததாக எழுந்த புகாரில் மத்திய பிரதேச அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave your comments here...