ஐ.எஸ். அமைப்பில் இணைந்த கேரளா தம்பதி ஆப்கானிஸ்தானில் சரணடைந்தார் : என்ஐஏ அதிகாரிகள் தகவல்.!

கோவை பொள்ளாச்சியில் வசிப்பவர் மூதாட்டி கிரேசி தாமஸ். இவரது மகன் பெக்சின். இவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிந்து சம்பத் என்பவரது மகள் நிமிஷாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் திடீரென மாயமான இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின் நிமிஷா என்ற பெயரை பாத்திமா என்றும் கிறித்தவ மதத்தில் இருந்த பெக்சின் தான் பெயரை இஸ்லாமிய மதத்திற்கு மாறி இஷா என்றும் மாற்றிக் கொண்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ். பயங்கரவாதியுடன் சேர்ந்து தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு இருந்தபடியே தாயார் பிந்துவுடன் தொலைபேசியில் மகள் நிமிஷா பேசி வந்தார். தன் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை ‘இ மெயில்’ வாயிலாக அனுப்பியுள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடைசியாக தன் தாயாருடன் நிமிஷா போனில் பேசியுள்ளார். அதன் பின் அவர்களிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் பிந்துவை அவரது வீட்டில் சந்தித்த தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஆப்கனில் சமீபத்தில் சரணடைந்த சில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காட்டினர்.
Nimisha from Kerala, married Bexin & had a baby girl & changed the name to Fatima and bexin to Isha.
They joined Afghan #ISIS with Abdul Rahim. Nimisha's mother found her image in recent Afghan's ISIS arrested list with help of NIA & also assures for their safety return.#RT pic.twitter.com/bB3DdW0zAJ
— MODIfied Indian – AGNIVEER 🇮🇳 (@MODIfiedTamilan) November 29, 2019
அதில் தனது, மகள் மருமகன் மற்றும் பேரக் குழந்தை இருப்பதை பிந்து உறுதி செய்தார். இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வரும் பெக்சினின் தாயார் கிரேசி தாமஸ் புகைப்படத்தை பார்த்து தனது மகனை அடையாளம் காட்டினார். இந்த சம்பவம் கேரளா மட்டும் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உள்ளது.
Leave your comments here...