தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த விலங்குகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

தமிழகம்

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த விலங்குகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த  விலங்குகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 15 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து வந்த விமானப் பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் வகை குரங்கு ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல கடந்த 16 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாஹிப் தம்பியை சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 9 வெள்ளை எலிகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், பாங்காக் விமான நிலையத்தின் வெளியில் அடையாளம் தெரியாத நபர் இந்த பார்சலை கொடுத்து, இதை சென்னை விமான நிலையத்தின் வெளியில் ஒருவர் பெற்றுக் கொள்ள இருந்ததாகவும் தெரிவித்தனர். இருவரிடமிருந்தும் விலங்குகளை பறிமுதல் செய்த சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பினர்.

Leave your comments here...