உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவு.!

சமூக நலன்

உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவு.!

உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவு.!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்  அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில் நகர்புறங்களில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரக பகுதிகளில் வாக்குச்சசீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி  கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டும்,  கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற  வாக்குச்சீட்டும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது போல் ஊரக பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கும் வகையில்  தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது ஊரக பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த சட்டத்தில்  வழி வகை செய்யப்படவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நன்கு பரிசீலனை செய்து ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த அனுமதி அளித்து சட்டதிருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...