டிஜிட்டல் ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா…!

சமூக நலன்

டிஜிட்டல் ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா…!

டிஜிட்டல் ஊடகங்கள்,  செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை முறைப்படுத்த  புதிய வரைவு மசோதா…!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22ம் தேதி 28 தனிநபர் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.  அதில் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் 1,867ம் ஆண்டில் இயற்றப்பட்ட புத்தகங்கள் மற்றும் பத்திரிகை பதிவு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே பல்வேறு திருத்தங்களுடன் புதிய வரைவு மசோதாவை தயார் செய்தது.

அதில், டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்துவது, தற்போது நடைமுறையில் இருக்கும் ஊடக குற்றங்களுக்கு, பதிப்பாளர்களுக்கு 6 மாதங்கள் சிறை தணடனை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மசோதாவை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இந்த வரைவு மசோதா ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகை, பருவஇதழ், டிஜிட்டல் ஊடகங்களின் பதிப்பாளர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...