மர்மமான முறையில் 200 ஆடுகள் இறப்பு – உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை..!

தமிழகம்

மர்மமான முறையில் 200 ஆடுகள் இறப்பு – உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை..!

மர்மமான முறையில் 200 ஆடுகள் இறப்பு – உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, 200 ஆடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. கடந்த மாதம் அம்மை நோய் தடுப்பூசி செலுத்திய பின் உயிரிழந்ததால் சோகம்.

ராஜபாளையம் அருகேயுள்ள அலப்பசேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். 250 ஆடுகளை வளர்த்து வரும் இவர், தனது ஆடுகளை அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள கண்மாய் கரைப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மேய்ச்சலில் இருந்த ஆடுகள் திடீரென்று ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன. சுமார் 200 ஆடுகள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இறந்தன.

இதனைப் பார்த்து பதறிய பாண்டியராஜன், இது குறித்து அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் கால்நடைத்துறையில் இருந்து அதிகாரிகள், மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்த பாண்டியராஜன், கடந்த மாதம்தான் தன்னிடம் இருந்த ஆடுகளுக்கு அம்மை நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதன் காரணமாக ஆடுகள் இறந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. கால்நடை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இதனை ஆய்வு செய்து, இறந்து போன ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே தன்னால் மீண்டும் தொழில் செய்ய முடியும் என்று வேதனையுடன் கூறினார். ஒரே நேரத்தில் 200 ஆடுகள் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...