திமுக சார்பாக போட்டியிடும் – 21 மாநகராட்சி மேயர்கள் யார் ? முழு பட்டியல்.!

அரசியல்

திமுக சார்பாக போட்டியிடும் – 21 மாநகராட்சி மேயர்கள் யார் ? முழு பட்டியல்.!

திமுக சார்பாக போட்டியிடும் – 21 மாநகராட்சி மேயர்கள் யார் ? முழு பட்டியல்.!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெருவாரியாக இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவானது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக மேயர் வேட்பாளர் பட்டியலில் உள்ள பிரியா வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

திமுகவில் மேயர் வேட்பாளர் ரேஸில் கொளத்தூர் மாநகராட்சியின் 70 ஆவது வார்டில் போட்டியிட்ட ஸ்ரீதரணி, 159 ஆவது வார்டில் போட்டியிட்ட அமுதபிரியா செல்வராஜ், 74 ஆவது வார்டில் போட்டியிட்ட பிரியா ஆகியோர் இடையே கடுமையான போட்டி இருந்தது. இவர்களில் படித்தவர்கள் மற்றும் எந்தவித சர்ச்சைப் பின்னணியும் இல்லாதவர்களை திமுக தலைமை தேர்ந்தெடுக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் பிரியாவின் பெயரை அறிவாலயம் டிக் அடித்துள்ளது. 28 வயதான பிரியா எம்.காம் பட்டதாரி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது குடும்பம் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளது. அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே.சேகர்பாபுவின் ஆதரவாளராக இருப்பதால் இவர் மேயர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக முன்பே கூறப்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் கே.சரவணன் மேயராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்: கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர், 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர் மற்றும் 8 பேரூராட்சி தலைவர், 11 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூ.,: மதுரை மாநகராட்சி துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய கம்யூ.,: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத் தலைவர், 4 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.,: ஆவடி துணை மேயர், ஒரு நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 3 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வி.சி.க.,: கடலூர் துணை மேயர், 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத் தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 7 பேரூராட்சி துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி

மேயர் – ஆர். பிரியா
துணை மேயர் – மு. குமார்

மதுரை மாநகராட்சி

மேயர் – இந்திராணி

திருச்சி மாநகராட்சி

மேயர் – மு. அன்பழகன்
துணை மேயர் – திவ்யா தனக்கோடி

திருநெல்வேலி மாநகராட்சி

மேயர் – பி.எம்.சரவணன்
துணை மேயர் – கே.ஆர்.ராஜூ

கோவை மாநகராட்சி

மேயர் – . கல்பனா
துணை மேயர் – இரா. வெற்றிச்செல்வன்

சேலம் மாநகராட்சி

மேயர் – ஏ. இராமச்சந்திரன்

திருப்பூர் மாநகராட்சி

மேயர் – சூ. தினேஷ் குமார்

ஈரோடு மாநகராட்சி

மேயர் – . நாகரத்தினம்
துணை மேயர் – செல்வராஜ்

தூத்துக்குடி மாநகராட்சி

மேயர் – என்.பி.ஜெகன்,
துணை மேயர் – . ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி மாநகராட்சி

மேயர் – ஜி. உதயகுமார்

தாம்பரம் மாநகராட்சி

மேயர் – வசந்தகுமாரி கமலகண்ணன்
துணை மேயர் – ஜி. காமராஜ்

காஞ்சிபுரம் மாநகராட்சி

மேயர் -மகாலட்சுமி யுவராஜ்,

வேலூர் மாநகராட்சி

மேயர் – . சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் – சுனில்

கடலூர் மாநகராட்சி

மேயர் – . சுந்தரி

தஞ்சாவூர் மாநகராட்சி

மேயர் – சண். இராமநாதன்
துணை மேயர் – . அஞ்சுகம் பூபதி

கும்பகோணம் மாநகராட்சி

துணை மேயர் – தமிழழகன்

கரூர் மாநகராட்சி

மேயர் – . கவிதா கணேசன்
துணை மேயர் – தாரணி பி.சரவணன்

ஒசூர் மாநகராட்சி

மேயர் – எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் – சி.ஆனந்தைய்யா

திண்டுக்கல் மாநகராட்சி

மேயர் – . இளமதி
துணை மேயர் – இராஜப்பா

சிவகாசி மாநகராட்சி

மேயர் – . சங்கீதா இன்பம்
துணை மேயர் – . விக்னேஷ் பிரியா

நாகர்கோவில் மாநகராட்சி

மேயர் – மகேஷ்,
துணை மேயர் – . மேரி பிரின்சி

Leave your comments here...