உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கார்ட்டோசாட்’ செயற்கைக்கோள் : நவம்பர்.27ல் விண்ணில் பாய்கிறது : இஸ்ரோ அறிவிப்பு.!

சமூக நலன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பூமி ஆராய்ச்சிக்காக ‘கார்ட்டோசாட்’ என்று அழைக்கப்படும், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்டோசாட் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 9-வது செயற்கைகோளாக கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொலை உணர்வு செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோளுடன் அமெரிக்காவின் வணிக ரீதியிலான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ராக்கெட்டில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான ‘கார்டோசாட்-3’ ஒரு மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள். இது புவி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக பயன்படுத்தப்படும். இதேபோல் துல்லியமான படங்களை படம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 27 ஆம் தேதி 9.28 மணிக்கு கார்டோசாட் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Leave your comments here...