சபரிமலை விவகாரம் : அடங்க மறுக்கும் ரஹ்னா பாத்திமா : பாதுகாப்பு அளிக்க இயலாது காவல்துறை மறுப்பு..!

சமூக நலன்

சபரிமலை விவகாரம் : அடங்க மறுக்கும் ரஹ்னா பாத்திமா : பாதுகாப்பு அளிக்க இயலாது காவல்துறை மறுப்பு..!

சபரிமலை விவகாரம் : அடங்க மறுக்கும் ரஹ்னா பாத்திமா : பாதுகாப்பு அளிக்க இயலாது காவல்துறை மறுப்பு..!

சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்குச் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.கடந்த ஆண்டு இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த, ரஹ்னா பாத்திமா, கடந்த ஆண்டு சபரிமலை வந்தார். பம்பையில் இருந்து, போலீஸ் ஜாக்கெட் அணிந்து, பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் திரும்பி சென்றார். அவர் விட்டுச் சென்ற இருமுடி கட்டை பார்த்த போது, வழிபாட்டு பொருட்களுக்கு பதிலாக, கொய்யாப்பழம் முதலிய பொருட்கள் இருந்தன. இது, பெரும் விவாதத்தை கிளப்பியது. பி.எஸ்.என்.எல்., அவரை, ‘சஸ்பெண்ட்’ செய்தது. அது இன்னும் தொடர்கிறது.தொடர்ந்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாக, கைது செய்யப்பட்டார்; அவர் மீது வழக்குகள் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்லப் போவதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி, கொச்சி போலீஸ் துணை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த காவல்துறை, கோர்ட் உத்தரவுடன் வந்தால் மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படம் என தெரிவித்தது. மேலும் கேரள அரசின் உத்தரவுப்படி விளம்பர நோக்கில் வருபவர்களுக்கும், உச்ச நீதிமன்ற அனுமதியின்றி வருபவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave your comments here...