1975 முதல் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது – இஸ்ரோ..!

இந்தியா

1975 முதல் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது – இஸ்ரோ..!

1975 முதல்  129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது – இஸ்ரோ..!

கடந்த 1975 முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது என மாநிலங்களவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்) கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது.

இன்று வரை இந்தியாவின் 53 செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பாட்டிலிருந்து பல்வேறு முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது. இதில் 21 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள், 8 திசைகாட்டும் செயற்கைகோள்கள், 21 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், 3 செயற்கைகோள்கள் அறிவியல் செயற்கைகோள்கள் ஆகும்.

செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில் உதவுகிறது. மேலும், இஸ்ரோ மேற்கண்ட துறைகளை மேம்படுத்தும் வகையில் தேவைகளுக்கேற்ப பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

புவி அறிவியல், ஜல் சக்தி அமைச்சகம், காலநிலை முன்னறிவிப்பு, ஊரக வளர்ச்சி, மீன்வளம் மற்றும் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளில் செயற்கைக்கோள் பயன்பாடு அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்

Leave your comments here...